/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடிப்படை வசதிகள் இல்லாமல் திறக்கப்பட்ட விளையாட்டு திடல் :நேரு எம்.எல்.ஏ., பகீர் குற்றச்சாட்டு

ADDED : டிச 31, 2025 05:00 AM

புதுச்சேரி: பல கோடி மதிப்பில், திறக்கப்பட்ட அண்ணா திடல் விளையாட்டு மைதானத்தில் அடிப்படை வ சதிகளை, சரியான முறையில் செய்யாமல், மோசான நிலையில் இருப்பதாக, நேரு எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
அவர், கூறியதாவது;
புதுச்சேரி அண்ணா திடல், விளையாட்டு மைதானத்தை, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், கடந்த 27ம் தேதி திறந்து வைத்தார். தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில், மைதானத்தை பார்வையிட்டேன். கை கழுவும் சிங் வாஷ்பேசினுக்கு தண்ணீர் செல்லும் பைப் லைன் கொடுக்கப்படவில்லை. கழிவறையில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. அடிப்படை வசதிகளை சரியான முறையில் செய்யாமல் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு, சி.சி.டி.வி., கேமரா வசதியில்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தவறான நோக்கத்தில் மைதானத்திற்குள் வருவதாக தகவல் வருகிறது. மைதான வளாகத்தில், மது பாட்டிகள் அதிகளவில் கிடக்கிறது.
17 கோடி ரூபாய் மதிப்பில், மைதானம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்தும், சுத்தம் செய்யாமல், ஏன் அவசரமாக திறக்கப்பட்டது. இந்த மைதானத்தை, திரு.வி.க., பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விளையாட வரும் போது, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. வாலிபால், புட் பால் விளையாட இடங்கள் அமைக்கப்படவில்லை.
அதே போல், புதிய பஸ் ஸ்டாண்டில், பயணிகள் உட்கார வசதி உள்ளிட் அடிப்படை வசதியில்லாமல் உள்ளது. அங்குள்ள கடைகள் இன்னும் திறக்கபடாமல் உள்ளது. இதுசம்மந்தமாக, கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.