தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செய்தி முருங்கப்பாக்கத்தில் இன்று சித்தர்கள் மாநாடு

செய்தி முருங்கப்பாக்கத்தில் இன்று சித்தர்கள் மாநாடு

செய்தி முருங்கப்பாக்கத்தில் இன்று சித்தர்கள் மாநாடு


ADDED : மார் 01, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முருங்கப்பாக்கத்தில் இன்று சித்தர்கள் மாநாடு மற்றும் அஸ்வமேத யாகம் நடக்கிறது.

மன அமைதிக்கான ஆன்மிக மையம் மற்றும் புதுச்சேரி அகில பாரத இந்து மகா சபை, அகில உலக ஆன்மிக பேரவை சார்பில், சித்தர்கள் மாநாடு மற்றும் அஸ்வமேத யாகம் முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில், மந்தக்கரை திடலில் இன்று (1ம் தேதி) மதியம் 2:00 மணிக்கு துவங்குகிறது.

மாநாட்டில், உலகில் சமாதானமும், அமைதியும் நிலவி போர்களற்ற சகாப்தம் உருவாகவும், மனிதகுலம் தன்னிறைவு பெறவும், மக்கள் பிறப்பின் பேருண்மையை உணர்ந்து கொண்டு, சக மனிதர்களோடு அன்பும், கருணையுடன், இனக்கமாக வாழ்கின்ற வழிகளை நிறைவேற்றி கொள்வது குறித்து சொற்பொழிவு நடக்கிறது.

விழாவை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைக்கிறார். புதுச்சேரி, மன அமைதிக்கான ஆன்மிக மைய நிறுவனர் மணிவண்ணன் வரவேற்கிறார். முதல்வர் ரங்கசாமி, மாநாட்டு மலரை வெளியிடுகிறார். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளார், அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தா மகராஜ், செண்டலங்கார செண்பகமன்னர் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் அருளாசி வழங்குகின்றனர்.

தவஞானவள்ளல் குருமகான், உலக அமைதி தவம் குறித்து பேசுகிறார். அகில உலக ஆன்மிக பேரவை நிறுவனர் பிரபஞ்சாநத்தா தெய்வசிகாமணி சுவாமி சிறப்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டில், சித்தர்கள், ஆதினங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், சைவ சாதுக்கள், சன்னியாசிகள், துறவிகள், சைவ, வைணவ அடியார்கள், ஆன்மிகவாதிகள் பங்கேற்கின்றனர். இதில், 1,008 சங்கல்பதாரர்கள் மகா வேள்வியில் சமர்ப்பணம் செய்கிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us