/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரம்பரிய கில்லி விளையாட்டு போட்டி; இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
/
பாரம்பரிய கில்லி விளையாட்டு போட்டி; இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
பாரம்பரிய கில்லி விளையாட்டு போட்டி; இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
பாரம்பரிய கில்லி விளையாட்டு போட்டி; இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
ADDED : அக் 25, 2022 08:06 AM

புதுச்சேரி : தீபாவளி பண்டிகையொட்டி தமிழர்களின் பாரம்பரிய கில்லி விளையாட்டு போட்டி நடந்தது. இதில் முதியவர்,இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நட்பு, ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் பல காணாமல் போய்விட்டன. நொண்டி அடித்தல், பரமபதம், ஓடி பிடித்து விளையாடும் திருடன் - போலீஸ் விளையாடுதல், கில்லி, கோலி குண்டு, பம்பரம் விடுதல், பச்சை குதிரை ஏறுதல், கண்ணாமூச்சி, தாயம் விளையாடுதல் போன்றவை இன்று இல்லை.
இதில் கிட்டிப் புள்ளு எனும் கில்லி தமிழரின் பழமையான ஒரு விளையாட்டு. பொதுவாகச் சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் 1950-ம் ஆண்டு வரையில் நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்டாக இருந்தது.
உடல் ஆரோக்கியம், உற்சாகம் மட்டுமின்றி குழு மனப்பான்மை, ஒற்றுமை உணர்வு, நட்புணர்வு பலப்படுதல், துரித முடிவெடுக்கும் திறன் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய இவ்விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் புதுச்சேரியில் நண்பேண்டா கில்லி குழு இறங்கியுள்ளது.
தீபாவளியையொட்டி புதுச்சேரியின் மணவெளி கிராமத்தில் சிறப்பு கில்லி போட்டியை நேற்று இக்குழு நடத்தியது. இதில் ஒதியம்பட்டு, அரியாங்குப்பம், சோலைநகர், வாழைகுளம் போன்ற பகுதிகளில் இருந்து 10 குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பட்டாசும், இனிப்பும் பரிசாக வழங்கப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கூறும்போது, இன்றைய தலைமுறைக்கு கில்லி விளையாட்டு என்பதே தெரியாது. இதை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். போட்டியில் பங்கேற்றவர்கள் வெவ்வேறு ஊர், வெவ்வேறு சாதி என இருந்தாலும் கில்லியால் இணைந்துள்ளோம்.
முதியவர் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். பாரம்பரிய கில்லி விளையாட்டை அரசு மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

