/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது
/
குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது
ADDED : பிப் 19, 2026 05:15 AM

புதுச்சேரி: பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் (எ) புளியங்கொட்டை என்ற ரவுடி மீது புதுச்சேரி வடக்கு பகுதி எஸ்.பி., ரகுநாயகம் பரிந்துரையின் பேரில், அவரை, போதை பொருள் தடுப்பு குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
அதையடுத்து ரங்கராஜை போலீசார் கைது செய்து காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறப்பாக செயல்பட்ட மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோரை பாராட்டி, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் சான்றிதழ் வழங்கி, பாராட்டினார்.

