/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., - பா.ஜ., உறவில் விரிசல்? நிவாரணம் அறிவிப்பு நிகழ்வு புறக்கணிப்பு
/
என்.ஆர்.காங்., - பா.ஜ., உறவில் விரிசல்? நிவாரணம் அறிவிப்பு நிகழ்வு புறக்கணிப்பு
என்.ஆர்.காங்., - பா.ஜ., உறவில் விரிசல்? நிவாரணம் அறிவிப்பு நிகழ்வு புறக்கணிப்பு
என்.ஆர்.காங்., - பா.ஜ., உறவில் விரிசல்? நிவாரணம் அறிவிப்பு நிகழ்வு புறக்கணிப்பு
ADDED : டிச 08, 2024 04:52 AM
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. புயல் ஓய்ந்த மறு நாளே சாத்தனுார், வீடூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், சங்கராபரணி, தென்பெண்ணை ஆறு வழியாக வெள்ளமாக பெருக்கெடுத்தது.
கரையோரம் உள்ள பாகூர், சோரியாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. பேரிடர் மீட்பு படை, ராணுவம் இணைந்து மக்களை மீட்டனர். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரண தொகைகள் சட்டசபையில் அறிவித்தார்.
அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார் உடனிருந்தனர். பா.ஜ., சார்பில் சபாநாயகர், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார் பங்கேற்கவில்லை.
வழக்கமாக முதல்வர் அலுவலகத்தில், நிதி உதவி காசோலை, பட்டா, நலத்திட்ட உதவி வழங்கல் என எந்த நிகழ்வு நடந்தாலும், சபாநாயகர் செல்வம் இல்லாமல் நடக்காது. ஆனால் புதுச்சேரி முழுதும் உள்ள மக்களுக்கு 210 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரண தொகை அறிவிக்கும் நிகழ்வில் பா.ஜ., அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
விசாரித்தபோது, நிவாரணம் அறிவிக்கும் முன், பா.ஜ.,வினரிடம் முதல்வர் ரங்கசாமி ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்த மனஸ்தாபம் காரணமாக நிவாரண தொகை அறிவிக்கும் நிகழ்வை பா.ஜ., புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி, 'தாமரை இலை மீது தண்ணீர் திவளை' போல உள்ளார். தற்போது அந்த விரிசல் மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.