என்.ஆர்.காங்., வேட்பாளர் தியாகராஜன் ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., வேட்பாளர் தியாகராஜன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 06:39 PM

பாகூர்: பாகூர் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் தியாகராஜன், குருவிநத்தம் கிராமத்தில் 2ம் நாளாக ஓட்டு சேகரித்தார்.
குருவிநத்தம் புறாக்கோவில், பாரதி நகர், மெயின்ரோடு, உள்ளிட்ட பகுதியில், கூட்டணி கட்சி நிர்வாகிளுடன் நேற்று 2ம் நாளாக வீடு வீடாகச் சென்று, ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர், புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறினார்.
மேலும், மீண்டும் ரங்கசாமி முதல்வரனால்தான் புதுச்சேரியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்கள் தடையின்றி தொடரும். படித்த இளைஞர்களுக்கு நேர்மையான முறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஏழை , எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி, மகளிர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவி தொகை உயர்த்தப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
எனவே, ரங்கசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட ஜக்கு சின்னத்தில் ஓட்டுகள் போட்டு வெற்றி பெறச் செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
