/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., அமைச்சருக்கே 138 நாட்களுக்கு பிறகு தான் பொறுப்பு ஜான்குமாருக்கு இலாகா உடனே கிடைக்குமா?
/
என்.ஆர்.காங்., அமைச்சருக்கே 138 நாட்களுக்கு பிறகு தான் பொறுப்பு ஜான்குமாருக்கு இலாகா உடனே கிடைக்குமா?
என்.ஆர்.காங்., அமைச்சருக்கே 138 நாட்களுக்கு பிறகு தான் பொறுப்பு ஜான்குமாருக்கு இலாகா உடனே கிடைக்குமா?
என்.ஆர்.காங்., அமைச்சருக்கே 138 நாட்களுக்கு பிறகு தான் பொறுப்பு ஜான்குமாருக்கு இலாகா உடனே கிடைக்குமா?
ADDED : ஜூலை 13, 2025 05:43 AM
புதுச்சேரி : சொந்த கட்சி அமைச்சருக்கு 138 நாட்கள் கடந்து இலாகா ஒதுக்கிய முதல்வர் ரங்கசாமி, ஜான்குமாருக்கு உடனடியாக இலாகா ஒதுக்குவாரா என, கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமார் பதவி பறிக்கப்பட்டு, ஜான்குமார் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர், நாளை 14ம் தேதி மதியம் 1:30 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்கிறார்.
வழக்கமாக அமைச்சர் பதவி ஏற்றபிறகு, மாலையில் அவருக்கு இலாகா ஒதுக்கப்படும். ஆனால் நாளை ஜான்குமார் பதவி ஏற்றாலும் அவருக்கு இலாகா ஒதுக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அமைச்சராக இருந்த சாய்சரவணன்குமார், ஆதிதிராவிடர் நலத் துறை, தீயணைப்பு துறை, சிறுபான்மையினர் துறையினர் இலாகாக்களை கவனித்து வந்தார். அவரது பதவி பறிக்கப்பட்ட நிலையில் இந்த இலாகாக்களை ஜான்குமாருக்கு அப்படியே வழங்குவதில் முதல்வர் ரங்கசாமிக்கு எந்த பிரச்னையும் இல்லை. உங்களுக்கு கொடுத்துவிட்டோம்; அப்படியே பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.
ஆனால் அமைச்சரவையில் மாற்றம் செய்து ஜான்குமாருக்கு முக்கிய இலாகாவை தர வேண்டும் என, பா.ஜ., மேலிடம் நினைக்கிறது. இங்கு தான் சிக்கல் எழுந்துள்ளது. ஜான்குமாருக்கு முக்கிய இலாகாக்கள் கொடுத்தால் என்.ஆர்.காங்., அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகனின் இலாகாக்களில் மாற்றம் செய்ய வேண்டும். அப்படியே தன் சொந்த கட்சி அமைச்சர்களை திருப்திப்படுத்த முதல்வரும் தன்னுடைய சில இலாக்காக்களை பிரித்து கொடுக்க வேண்டும்.
அப்படி செய்தால் என்.ஆர்.காங்., அமைச்சர்களுக்கு மனகசப்பு ஏற்படும். கட்சியிலும் வீண் குழப்பம் ஏற்படும். ஆட்சி முடிய இன்னும் 10 மாதமே உள்ள நிலையில் இந்த விஷ பரீட்சையும், வீண் குழப்பமும் தேவையில்லை என்ற முடிவுக்கு முதல்வரும் வந்துவிட்டார்.
எனவே, நமச்சிவாயத்திடம் உள்ள இலாகாக்களை கேட்டுக்கொள்ளுங்கள் என்று கைவிரித்துவிட, இப்போது பா.ஜ.,வில் பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. ஜான்குமார் நமச்சிவாயத்திடம் உள்ள தொழில் துறையை எதிர்பார்க்கிறார். ஆனால் நமச்சிவாயம் பவர்புல்லான தொழில் துறையை விட்டு கொடுப்பாரா என்பது சந்தேகம் தான்.
எனவே ஜான்குமாருக்கு தற்போதுள்ள துறைகளுடன் கல்வி அமைச்சர் பதவியை முக்கிய இலாகாவாக கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சொந்த கட்சி அமைச்சரான திருமுருகனுக்கே 138 நாட்களுக்கு பிறகு இலாகா கொடுத்த முதல்வர் ரங்கசாமி, சட்ட ஒழுங்கு சரியில்லை என, விமர்சித்த ஜான்குமாருக்கு உடனடியாக இலாகா ஒதுக்குவாரா என பா.ஜ.,வினரே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ., வினர் கூறுகையில், 'புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா கடந்த 20௨3ம் அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர், 2024ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் 138 நாட்களுக்கு பிறகு தான், அமைச்சரவையில் மாற்றம் செய்து, அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது சட்டம் ஒழுங்கு சரியில்லையென விமர்சித்த ஜான்குமாருக்கு உடனடியாக துறை கிடைக்குமா என்று தெரியவில்லை' என்றனர்.