/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புளு ஸ்டார் பள்ளியில் என்.எஸ்.எஸ்., பயிற்சி
/
புளு ஸ்டார் பள்ளியில் என்.எஸ்.எஸ்., பயிற்சி
ADDED : ஜூலை 02, 2025 02:01 AM
வில்லியனுார் : அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் புத்தாக்க பயிற்சி நடந்தது.
அம்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முதலாம் ஆண்டு தன்னார்வலர்களுக்கான புத்தாக்க பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் வழிகாட்டுதல் படி நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் வரலட்சுமி தலைமை தாங்கினார். மாநில நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி சதீஷ்குமார் புத்தாக்க பயிற்சி விழாவை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மாநில நாட்டு நப்பணி மேல்நிலைப் பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணி நோக்க உரையாற்றினார். பள்ளி துணை முதல்வர் சாலைசிவசெல்வம் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வீரமுத்து, கலைச்செல்வி, முரளிதரன் மற்றும் தங்கவேலு ஆகியோர் செய்தனர்.