UPDATED : நவ 14, 2026 01:55 AM
ADDED : நவ 14, 2026 01:54 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு செவிலியர் அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், வாயிற் கூட்டம் ஏனாம் அரசு மருத்துவமனை எதிரில் நடந்தது.
சங்க தலைவர் சுனிலா குமாரி, நிர்வாகி சரஸ்வதி, செயற்குழு உறுப்பினர் ஷேக் மெஹபுன்னிசா பேகம் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், காலி செவிலியர் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
செவிலியர் படி நிலுவை தொகையே உடனே வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
