/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவிலியர் கல்லுாரி மாணவிகள் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்பு
/
செவிலியர் கல்லுாரி மாணவிகள் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்பு
செவிலியர் கல்லுாரி மாணவிகள் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்பு
செவிலியர் கல்லுாரி மாணவிகள் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜன 24, 2026 06:25 AM

புதுச்சேரி: மதர் தெரசா செவிலியர் கல்லுாரி மாணவிகள் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்று செவிலியர் பணிக்கு தங்களை அர்ப்பணித்து கொண்டனர்.
கோரிமேடு மதர் தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லுாரியில் 34-வது பேட்ச் முதலாமாண்டு செவிலியர் மாணவ - மாணவிகள் ஒளி விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்கும் விழா நடந்தது.
பேராசிரியர் மஞ்சு பாலா தாஷ் வரவேற்றார். கல்லுாரி தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மரிய தெரசா வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக சபரி செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜெனெஸ்டா மேரி ஜைசல் கலந்து கொண்டார். செவிலியர் துறையில் தலைமை பண்புகள், தொழில்முறை ஒழுக்கம், சமூக பொறுப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து பாரம்பரிய ஒளி விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதன் முக்கியத்துவத்தை கல்லுாரி பேராசிரியர் நிவேதிதா விளக்கினார். தொடர்ந்து கல்லுாரி முதல்வர் பெலிசியா சித்ரா நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசிக்க, தொடர்ந்து செவிலியர் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
துணை பேராசிரியர் சாரதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

