தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புவி வெப்பமயமாதலை தடுப்பதில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த பயிற்சி

 புவி வெப்பமயமாதலை தடுப்பதில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த பயிற்சி

 புவி வெப்பமயமாதலை தடுப்பதில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த பயிற்சி


ADDED : ஜன 24, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லுாரியில் இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங் துறை சார்பில் 'புவி வெப்ப மயமாதலை தடுப்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் பாபு அசோக் தலைமை தாங்கினார். பெங்களூரு, இந்திய அறிவியல் நிறுவன முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி சதீஷ்குமார் கலந்து கொண்டு, புவி வெப்பமயமாதலுக்கான புதைபடிவ எரிபொருட்களை எரித்தல், பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பு, மரங்களை அழித்தல், தொழிற்சாலைகளின் மாசுபாடுகள் அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் குறித்தும், அதனால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு, வானிலை மாற்றம், துருவ பனிப்பாறைகள் உருகுதல், பாலைவனங்கள் விரிவடைதல், பல்லுயிர் பெருக்க பாதிப்பு, மனித இயல்பு வாழ்வில் தாக்கம் உள்ளிட்டவை குறித்தும் விளக்கினார்.

மேலும், புவி வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுதல், ஆற்றல் சேமிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்ற லை பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து மறுசுழற்சி செய்தல், ஆற்றல் தணிக்கை செய்தல், கல்லுாரிகளில் பசுமை வளாகங்களை அமைத்தல் ஆகியவற்றை மாணவிகள் கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்.

பயிற் சியில் அனைத்து துறைகளின் 2ம் மற்றும் இறுதியாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விமலன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us