ADDED : அக் 28, 2025 06:16 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 46; இவரது 2 வது மகள் ராஜேஸ்வரி 18; தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில், அவரது மனைவி மற்றும் மகள், மகன் என அனைவரும் துாக்கி உள்ளனர்.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில், ரவிச்சந்திரன் மகன் பிரதிஷ் துாங்கி எழுந்து பார்த்தபோது, ராஜேஸ்வரி வீட்டின் கூரையில் இரும்பு பைப்பில், சுடிதார் துப்பட்டாவால் துாக்கிட்டு கொண்ட நிலையில் தொங்கி உள்ளார். உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் அ ரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேஸ்வரி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், மனமுடைந்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

