/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிேஷகம்
/
சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிேஷகம்
ADDED : நவ 06, 2025 05:36 AM

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று நடந்த அன்னாபிேஷக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனையொட்டி, மாலை 3:30 மணிக்கு சாற்று முறை நடைபெற்று, 100 கிலோ அரிசி கொண்டு சமைக்கப்பட்ட அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகளை கொண்டு சித்தானந்த சுவாமி அலங்கரிக்கப்பட்டு மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7:30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இரவு 7:30 மணிக்கு அன்ன அலங்காரத்தை கலைத்து, சுவாமிக்கு பாலாபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

