தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரதாம்பாள் கோவிலில் திருப்பாவை ஒப்புவித்தல்

சாரதாம்பாள் கோவிலில் திருப்பாவை ஒப்புவித்தல்

சாரதாம்பாள் கோவிலில் திருப்பாவை ஒப்புவித்தல்


ADDED : டிச 26, 2024 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், நடைபெற்று வரும் 13ம் ஆண்டு, மார்கழி மகோற்சவ விழாவில், நேற்று திருப்பாவை ஓப்புவித்தல் போட்டி நடந்தது.

மார்கழி மாதத்தில், 30 நாட்கள் நடக்கும், மகோற்சவ விழா, கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும், மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை, கோவிலில், விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் சேவித்தல், திருப்பாவை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக நேற்று மாணவ, மாணவிகளின் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. அதனை தொடர்ந்து,இரவு முருங்கப்பாக்கத்தில் உள்ள சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், பஜனை நிகழ்ச்சி நடந்தது.

இன்று 26ம் தேதி, முரளிதர சுவாமியின் மதுர கீதங்கள் நிகழ்ச்சியும், சென்னை அஸ்வின் பாகவதர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிநடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us