தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன் பதப்படுத்தல் திட்டம் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம்

மீன் பதப்படுத்தல் திட்டம் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம்

மீன் பதப்படுத்தல் திட்டம் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம்

1


UPDATED : ஆக 13, 2026 11:20 PM

ADDED : ஆக 13, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2026 11:20 PM ADDED : ஆக 13, 2026 09:13 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:மீன் பதப்படுத்துதல் திட்டம் குறித்து, முதல்வர் ரங்காமியிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

மாநிலத்தில் மீன் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் மற்றும் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக மேம்படுத்தும் அரசின் தொலைநோக்கு பார்வைக்கு ஆதரவாக, புதுச்சேரியில் செயல்படுத்தப்பட உள்ள மீன்வள தடமறிதல் முன்னெடுப்பு குறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணன், முதல்வர் சண்முகம், அமெரிக்கா நிறுவனத்தின் மீன் வளம் மற்றும் கடல்கள் பிரிவு துணை தலைவர் கேத்தரின் டே-க்ரோ செட் போன்சான் மற்றும் குழுவினர் இத்திட்டம் குறித்து முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து பேசினர்.

அப்போது புதுச்சேரி அரசின் மீன்வளத் துறை செயலர் மணிகண்டன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் மற்றும் துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுச்சேரியில் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ள கடல் உணவுப் பொருட்களின் தடமறிதல் திட்டம் குறித்து இயக்குநர் விளக்கமளித்தார். இத்திட்டத்தின் மூலம் மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள், மீன் இறங்குதளங்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோருக்கு இடையே நம்பகமான தகவல் சங்கிலி உருவாக்கப்படும். இதன் மூலம் மீனவர்கள் அதிக மதிப்புள்ள சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

புதுச்சேரியின் முக்கியமான கடலோர அமைவிடம், மீன்வள ஆதாரங்கள், மீன்பிடிப் படகுகள், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முக்கிய சந்தைகள் மற்றும் போக்குவரத்து தளவாட இணைப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, புதுச்சேரியின் மீனவ சமூகங்கள் மற்றும் கடல் உணவு சார்ந்த தொழில்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us