
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த மூதாட்டி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சாலை, வடமங்கலம் அருகே சாலையில், அடையாளம் தெரியாத, 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, கடந்த 31ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.