தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆம்னி பஸ் எரிந்து விபத்து: 3 பேர் மீது வழக்கு பதிவு

 ஆம்னி பஸ் எரிந்து விபத்து: 3 பேர் மீது வழக்கு பதிவு

 ஆம்னி பஸ் எரிந்து விபத்து: 3 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜன 15, 2026 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்; ஆம்னி பஸ் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஆம்னி பஸ் 13 பயணிகளுடன், புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சிக்கு, கடந்த 12ம் தேதி இரவு புறப்பட்டது. பஸ்சை, டிரைவர் செந்திகுமார் ஓட்டிச் சென்றார்.

நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த, தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆவணங்கள் மற்றும் புதுச்சேரியில் இயக்குவதற்கான உரிமம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

மேலும், பஸ், சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால், சார்ட் சர்கீயூட் ஆகி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, பஸ் உரிமையாளர் சந்திரசேகர், டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் கணேஷ் ஆகியோர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us