/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி துறை பணிகளை விரைவுபடுத்த முதல்வருக்கு ஓம்சக்திசேகர் கோரிக்கை
/
உள்ளாட்சி துறை பணிகளை விரைவுபடுத்த முதல்வருக்கு ஓம்சக்திசேகர் கோரிக்கை
உள்ளாட்சி துறை பணிகளை விரைவுபடுத்த முதல்வருக்கு ஓம்சக்திசேகர் கோரிக்கை
உள்ளாட்சி துறை பணிகளை விரைவுபடுத்த முதல்வருக்கு ஓம்சக்திசேகர் கோரிக்கை
ADDED : நவ 05, 2024 06:48 AM
புதுச்சேரி: உள்ளாட்சி துறை பணிகளை விரைவு படுத்த வேண்டும் என முதல்வருக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில உட்கட்டமைப்பு திட்டங்களை,உள்ளாட்சித் துறை மற்றும் பொதுப்பணி துறை மேற்கொள்ள வேண்டும். ஆனால் உள்ளாட்சித் துறையின் செயல்பாடுகள் சொல்லும்படியாக இல்லை .
புது பஸ்டாண்ட் ,நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர் பகுதியில் மூடப்பட்டிருக்கும் சமுதாயக்கூடத்தை திறக்க மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.குயவர்பாளையம் சமுதாய நலக்கூடம் பராமரிப்பின்றி உள்ளது.
புதுச்சேரி பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் தேக்கமடைந்துள்ளது.நெல்லித்தோப்பு மார்க்கெட் மற்றும் சக்தி நகர் கழிப்பிடம் கட்டும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.எனவே, எதிர்வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு உள்ளாட்சி நிர்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த சம்பந்தப்பட்ட ஆணையர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
உள்ளாட்சித் துறை பணிகளை விரைவு படுத்த முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

