/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரே நாடு ஒரே தேர்தல் பா.ஜ., விளக்க கூட்டம்
/
ஒரே நாடு ஒரே தேர்தல் பா.ஜ., விளக்க கூட்டம்
ADDED : டிச 29, 2025 05:46 AM

புதுச்சேரி: பா.ஜ., சார்பில் ஒரே நாடு - ஒரே தேர்தல், தொடர்பான விளக்கக் கூட்டம் நடந்தது.
புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, ஒரே நாடு - ஒரே தேர்தல் குறித்து விளக்கினார்.
மாநில அமைப்பாளர் அருள், இணை அமைப்பாளர் நாகேஸ்வரன், மாநில பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு,பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த காலங்களில் ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறையை காங்., ஆட்சியாளர்கள் தங்களின் சுயநல அரசியலுக்காக எவ்வாறு சீர்கேடு செய்தனர் என, விளக்கம் அளிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை குறித்தும், நாடு முழுதும் திறம்பட்ட நிர்வாக மேலாண்மையை அமல்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டன.

