ADDED : ஏப் 30, 2025 07:00 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அலர்ட் என்.ஜி.ஓ., மற்றும் புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சார்பில், அவசர உதவி மையம் துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அலர்ட் நிறுவனத்தின் தலைவர் மணநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சையத் சஜித் அலி, பொதுச் செயலாளர் தங்கமணிமாறன் முன்னிலை வகித்தனர். உதவி மையத்தை புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திருபாதி, எஸ்.பி., மாறன், ரங்கநாதன், செல்வம், அலர்ட் சென்னை நிறுவனத்தின் ராஜேஷ் திரிவேதி, ஈடன் இண்டஸ்ட்ரீஸ் மனித வள மேம்பாட்டு துறை தலைவர் அந்தோணி ஜெயக்குமார் மற்றும் அலர்ட் நிறுவனத்தின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடி முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்ப்பதற்காக இந்த உதவி மையம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

