/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொள்ளிடம் கீழணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
/
கொள்ளிடம் கீழணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ADDED : டிச 22, 2024 07:01 AM
காட்டுமன்னார்கோவில் : கொள்ளிடம் ஆற்றில் மழை வெள்ளப் பெருக்கு குறைந்ததால், டெல்டா பாசனத்திற்கு கீழணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
டெல்டா பகுதியில் கடந்த ஒரு வாரம் மழை இல்லாததால், கீழணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து, கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரும் குறைக்கப்பட்டது. நேற்று காலை வரை கொள்ளிடம் ஆற்றில் 5,000 கன அடி வீதம் திறந்துவிடப்பட்டது.
கீழணைக்கு நேற்று மாலை நிலவரப்படி 2,650 கன அடியாக நீர்வரத்து குறைந்ததால், கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால், டெல்டா பாசனத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கீழணை நீர் மட்டம் 8.4 அடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்கு வடவாற்றில் 2,150 கன அடி, வடக்கு ராஜன்வாய்க்கால் 210 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்கால் 300 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது. வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு 1,850 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. ஏரி நீர் மட்டம் 46.03 அடி. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 74 கன அடி, பாசனத்திற்கு 45 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது.