/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இதய நோய் சிகிச்சை மாத்திரைகள் வெளி மார்க்கெட்டில் விற்பனை எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு

ADDED : மார் 21, 2025 04:45 AM
புதுச்சேரி : சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி் தலைவர் சிவா பேசியதாவது:
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு நிகோமலன், சிஜிட்ரோம் என்ற மாத்திரை வழங்கப்பட்டு வந்தது. கடந்த 4 மாதமாக இந்த மாத்திரை இருப்பு இல்லை என கூறி மக்களை மருந்தாளுநர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.
இந்த மாத்திரை சாப்பிடாவிட்டால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
ஒரு வாரத்துக்கு இந்த மாத்திரை விலை ரூ. 600. மருந்தாளுநர்கள் வேண்டியவர்களுக்கு மட்டும் மாத்திரைகளை வழங்குவதாகவும், ஏழை மக்களை ஏமாற்றி, வெளியில் விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையின்றி மாத்திரை வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றை பிடித்து கருத்தடை செய்ய தேவையான நடவடிக்கையை அரசு ஏன் மேற்கொள்ளவில்லை.தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அவற்றை கண்காணிக்கவும், பிராணிகள் நலவாரிய அனுமதி பெற்று கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்கள் முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் அழைத்து வந்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசு கவனத்தில் கொண்டு இங்கும் அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.