/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாண்லே ஊழல் முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா உறுதி

ADDED : டிச 10, 2025 05:18 AM

புதுச்சேரி: பாண்லே நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, புதுச்சேரி மாநில தி.மு.க. மற்றும் தொ.மு.ச., பேரவை சார்பில், குருமாம்பேட் பாண்லே நிறுவன வாயில் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:
1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாண்லே நிறுவனம் துவக்க காலத்தில் 70 ஆயிரம் லிட்டர் அளவிற்கு பால் கொள்முதலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையும் நடந்தது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான பாலை புதுச்சேரியிலேயே கொள்முதல் செய்த காலம் மாறி, இன்று அண்டை மாநிலத்தில் அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு நிறுவனங்களான பாப்ஸ்கோ, ஸ்பின்கோ, அமுதசுரபி போன்றவைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், பாண்லே நிறுவனம் ரூ. 40 கோடிக்கு மேல் கடனைத் தாங்கி தள்ளாடிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.
பாண்லே நிர்வாகத்தை மீண்டும் இலாபத்தில் இயக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க., சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினோம். பாண்லே நிர்வாக சீர்கேட்டிற்கான ஆதாரம் உள்ளதால் அடுத்து நீதிமன்றத்தை நாடுவோம்' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், அருட்செல்வி, தொகுதி பொறுப்பாளர்கள் டாக்டர் நித்திஷ், பசுபிக் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பாண்லே தொ.மு.ச., பேரவை பொருளாளர் அன்பரசன் நன்றி கூறினார்.