/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரொட்டி, பால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை வழங்கல்
/
ரொட்டி, பால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை வழங்கல்
ரொட்டி, பால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை வழங்கல்
ரொட்டி, பால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை வழங்கல்
ADDED : மார் 21, 2025 05:25 AM

புதுச்சேரி : ரொட்டி, பால் ஊழியர்களுக்கு கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்விற்கான அரசாணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.
பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் ரொட்டி,பால் ஊழியர்கள், ட்ரை சைக்கிள் ஆபரேட்டர்கள் மற்றும் மதிய உணவு ஊழியர்கள் 917 பேர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊதிய உயர்வு கோரி வந்தனர்.
அதனையேற்று முதல்வர் ரங்கசாமி, கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் பொதுப்பணி துறை ஊழியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை ரொட்டி, பால் ஊழியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தார்.
அதன்படி பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. ரொட்டி, பால் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனைக் கண்டித்து ரொட்டிப்பால் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரொட்டி, பால் ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை, முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் ரொட்டி, பால் ஊழியர்களுக்கு வழங் கினார். அப்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ரமேஷ், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், அரசு செயலர்கள் (நிதி) மாதோவ்ராவ் மோரே, (கல்வி) ஜவஹர், இயக்குநர் பிரியர்தர்ஷினி உடனிருந்தனர்.