/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அவர் லேடி ஆப் விக்டரி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
அவர் லேடி ஆப் விக்டரி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
அவர் லேடி ஆப் விக்டரி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
அவர் லேடி ஆப் விக்டரி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 13, 2025 06:20 AM

பாகூர், : பாகூர் அவர் லேடி ஆப் விக்டரி மேல்நிலைப் பள்ளி, தொடர்ந்து 9வது முறையாக, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பாகூர் அவர் லேடி ஆப் விக்டரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 36 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம், தொடர்ந்து, 9 வது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, பாகூர் கொம்யூன் அளவில் சாதனை படைத்துள்ளது. பள்ளி அளவில் மாணவி கவிமலர் 560 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி பவானி 555 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மலர்விழி, 545 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றனர்.
மேலும், மாணவிகள் பவானி, மதுலேகா ஆகியோர் தாவரவியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநில அளவில் மற்றுமொறு சாதனையை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 36 மாணவர்களில், 25 பேர் டிஸ்டிங்ஷனிலும், 11 பேர் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை, பள்ளி முதல்வர் ராயல் டொமினிக் சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினர்.
நுாறு சதவீத வெற்றிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.