/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி தவில் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
/
புதுச்சேரி தவில் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
புதுச்சேரி தவில் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
புதுச்சேரி தவில் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
ADDED : ஜன 26, 2025 04:52 AM

புதுச்சேரி :  புதுச்சேரி தவில் கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. அவருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இதில் புதுச்சேரி அபி ேஷகப்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு,67 பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் 52 ஆண்டுகால தவில் இசை சேவையை பாராட்டி இந்த விருதினை புதுச்சேரி அரசின் பரிந்துரை பேரில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவர், நாடு முழுதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். புதுச்சேரி அரசின் கலைமாமணி விருதினையும், அம்பேத்கர் நேஷனல் விருதினையும், அம்பேத்கர் கலாஸ்ரீ தேசிய விருதினையும் பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ விருது தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டதை அறிந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரி தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு  மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரது உழைப்பிற்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. விருது பெற்றுள்ள தட்சிணாமூர்த்திக்கு பாராட்டுக்கள்.
தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், 'இசை கருவிகளில் ராஜ வாத்தியம் என்று அழைக்கப்படும் தவில் என்றாலே சின்ன வயசில் இருந்து கொள்ளை பிரியம்.
52 ஆண்டுகள் தவில் இசை பயணத்தில் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பரிந்துரை செய்த புதுச்சேரி அரசுக்கு நன்றி' என்றார்.

