தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுப்பதிவு நாளன்று சம்பளத்துடன் விடுமுறை

ஓட்டுப்பதிவு நாளன்று சம்பளத்துடன் விடுமுறை

ஓட்டுப்பதிவு நாளன்று சம்பளத்துடன் விடுமுறை


ADDED : செப் 12, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நாளன்று, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக,  மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பிறப்பித்துள்ள உத்தரவு:

  மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட பிரிவின் கீழ் தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் பணிபுரியும் அரசு, தனியார், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும், அக். 6 ம் தேதியன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். 

விடுமுறை காரணமாக எந்தவொரு தொழிலாளியின் ஊதியத்திலும் பிடித்தமோ அல்லது குறைப்போ செய்யக் கூடாது.

தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிபவர்களுக்கும் இது பொருந்தும். தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் வேறு தொகுதிகளிலோ அல்லது பிற பகுதிகளிலோ பணிபுரிந்தாலும், அவர்கள் ஓட்டளிக்க ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இவ்விதிகளை மீறி விடுமுறை வழங்க மறுப்பது அல்லது ஊதியத்தைக் குறைப்பது சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us