ADDED : அக் 25, 2024 06:16 AM

புதுச்சேரி: வில்லியனுார் அரசு பெண்கள் பள்ளியில் அயோடின் விழிப்புணர்வு மற்றும் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
நலவழித்துறை துணை இயக்குனர் ஊட்டச்சத்து பிரிவு மற்றும் வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக அயோடின் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் சமுதாய நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையன் வரவேற்றார். தலைமையாசிரியர் பஞ்சாத்தமா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் மதிவதணன், பெண் சுகாதார மேற்பார்வையாளர் சாஹிரா பானு முன்னிலை வகித்தனர்.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை, விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் வாழ்த்தி பேசினார்.
ஆசிரியர் சங்கரி தேவி நன்றி கூறினார்.