ADDED : மார் 19, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் கைலாசநாத கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்றைய விழாவில் கைலாசநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று இரவு தெருவடைச்சான் உற்சவமும், 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 23ம் தேதி தேரோட்டமும், 26ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.

