/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா நினைவு தினம்
/
பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா நினைவு தினம்
ADDED : பிப் 12, 2026 04:44 AM

புதுச்சேரி: பாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா நினைவு தினத்தையொட்டி, பா.ஜ., சார்பில் மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், பாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் உருவப்படத்திற்கு நேற்று மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங் கினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார், மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயந்தி, வில்லியனுார் மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், மீனவர் பிரிவு தலைவர் மாரியப்பன், மத்திய நலத்திட்டங்கள் பிரிவு தலைவர் கண்ணன், மருத்துவர் பிரிவு தலைவர் சிவபெருமான், முருகன், சுரேஷ், ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, மரியாதை செலுத்தினர்.

