பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருநாள் மாவட்ட பயிற்சி முகாம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருநாள் மாவட்ட பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 13, 2026 02:24 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருநாள் மாவட்ட பயிற்சி முகாம், வில்லியனுார் மற்றும் அரியாங்குப்பம் மாவட்டங்களுக்காக வில்லியனுார் ஆச்சார்யா கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
பயிற்சி முகாமினை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பா.ஜ., மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், முழுநேர அமைப்புப் பொறுப்பாளர் தசரத், தமிழ்நாடு சேவா பாரதி மாநில பொது செயலாளர் இளங்குமார் சம்பத், தமிழ்நாடு பா.ஜ., மாநிலப் பொது செயலாளர் ராம சீனிவாசன், தமிழ்நாடு பா.ஜ., மாநில ஓ.பி.சி., அணி தலைவர் வீரத் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளின் பேசினர்.
பயிற்சியில் வில்லியனுார் மற்றும் அரியாங்குப்பம் மாவட்டங்களுக்குட்பட்ட மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான முக்கிய நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர். பயிற்சியில் பா.ஜ., கொள்கைகள், சித்தாந்தங்கள், அமைப்பு கட்டமைப்பு, சமூக ஊடக செயல்பாடுகள், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், கட்சி விரிவாக்கப் பணிகள், தேர்தல் மேலாண்மை, திறன்மிக்க நிர்வாகக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் சிறப்பு வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.
ஏற்பாடுகளைமாநில பொது செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன் ஆகியோர் செய்துள்ளனர்.
