/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம்
/
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம்
ADDED : ஜூலை 04, 2025 02:18 AM

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம், முன்னாள் ராணுவ வீரர் ஆளவந்தான் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை, முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டன. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தன. ஆசிரியை ரேணு நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, வேலவன், லட்சுமணன், ப்ளோரன்ஸியா, சபரிநாதன், நித்தில வள்ளி, ஸ்ரீமதி, விஸ்வ பிரியா, ஓம் சாந்தி, மலர்க்கொடி, சுஜாதா, சிவரஞ்சனி, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.