ADDED : அக் 29, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: சாராயக்கடையில் தகராறில் ஈடுபட்டதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததால் பரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால் தர்மபுரம் பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் முஹமது பைசல், 38; பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் திருச்சியை சேர்ந்த பெண்னை திருமணம் செய்துக்கொண்டார்.பின்னர் கருத்து வேறுப்பாட்டில் மனைவியை விட்டு முஹமது பைசல் தனது தாய்வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சாராயக்கடையில் முஹமது பைசல் மற்றும் மது அருந்தவந்த இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர்.இதனால் மனமுடைந்த முஹமது பைசல் வீட்டில் சீலிங் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

