/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொத்து வரியை செலுத்துங்க! உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தல்
/
சொத்து வரியை செலுத்துங்க! உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தல்
சொத்து வரியை செலுத்துங்க! உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தல்
சொத்து வரியை செலுத்துங்க! உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தல்
ADDED : மே 31, 2025 05:19 AM
புதுச்சேரி : வீட்டு வரி மற்றும் சொத்துவரிகளை நிலுவையின்றி செலுத்துமாறு உழவர்கரை நகராட்சி ஆணையம் சுரேஷ்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்த நிதி ஆண்டிற்கான வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி வசூல் செய்யப்படுகிறது.
வரிகளை ஜவகர் நகர் நகராட்சி தலைமை அலுவலகம், வி.வி.பி. நகர் மற்றும் இ.சி.ஆரில் நவீன சுகாதார மீன் அங்காடியில் உள்ள வீட்டு வரி வசூல் மையங்களில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை வரி வசூல் செய்யப்படும்.
நகராட்சிக்குட்பட்டோர் வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரிகளை உடன் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் வரியினை ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியை பயன்படுத்தி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யு.பி.ஐ., மூலம் (Municipal Tax /Service என்ற தலைப்பினை தேர்வு செய்து, அதன் கீழ் Puducherry Property Tax என்ற தலைப்பை தேர்வு செய்து தங்களின் வரி வதிப்பு எண்ணை குறிப்பிட்டு தரவுகளை பெற்று வீட்டுவரி, சொத்துவரியை செலுத்தலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.