/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 04, 2025 01:29 AM

புதுச்சேரி : புதுச்சேரி பி.டி.யு., ஓய்வூதியர்கள் நலவாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக அரங்கத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், செயலாளர் ஜீவா வரவேற்றார். தலைவர் ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். துணை தலைவர் தாமரைசெல்வன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் பழனியப்பா பங்கேற்று பேசினார். பொருளாளர் சந்திரகுமார் வரவு செலவு அறிக்கை வாசித்தார். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சுடலை முத்துப்பிள்ளை, ரவிபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பென்ஷன் தாரர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவை தொகையை வழங்க வேண்டும். 25 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்த வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில், பணி வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.