/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாம் கடலுக்குள் செல்லும் குழாய்களில் எண்ணெய், காஸ் கசிவால் மக்கள் அச்சம்

ADDED : செப் 22, 2024 02:02 AM
புதுச்சேரி: கோதாவரி ஆற்றில் இருந்து கடலுக்குள் செல்லும் குழாய்களில் இருந்து, எண்ணெய் மற்றும் காஸ் கசிவு ஏற்படுவது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில், ஏனாம் பிராந்தியம், ஆந்திரா மாநிலம், காக்கிநாடாவை ஒட்டி அமைந்துள்ளது. ஏனாம் நடுக்கடலில் இருந்து ஓ.என்.ஜி.சி., சார்பில் 'காஸ்' எடுக்கும் பணி கடந்த, 2016ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது.
இதற்கான குழாய்கள் கோதாவரி ஆற்றில் இருந்து கடலுக்குள் செல்கின்றன. இந்தக் குழாய்களில் இருந்து எண்ணெய் மற்றும் காஸ் வெளியே வருகிறது.
இதையொட்டி, கோதாவரி ஆறு மற்றும் கடற்பகுதியில், கருப்பு நிற படலம் படிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் காற்று மாசும் ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, ஏனாம் வட்டார காங்., சார்பில், வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து மண்டல நிர்வாக அதிகாரிகள் அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனாலும், காஸ் மற்றும் எண்ணெய் கசிவு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.