/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தாங் போட்டி பரிசளிப்பு விழா
/
பெத்தாங் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஆக 21, 2025 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :பிச்சவீரன்பேட்டில் யூனிட்டி பெத்தாங் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான பெத்தாங் போட்டி நடந்தது.
போட்டியில், 373 அணிகள் கலந்து கொண்டன. அதில், லயன் கிங் அணி சார்பில், மாது, சுரேஷ் மற்றும் பிளே பெஸ்ட் பாய்ஸ் அணி சார்பில் ராஜா, திலிப் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
அதில், முதல் பரிசு வென்ற தேங்காய்திட்டு லயன் கிங் அணிக்கு ரூ. 14 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசுக் கோப்பை, இரண்டாம் பரிசு பெற்ற உப்பளம் பிளே பெஸ்ட் பாய்ஸ் அணிக்கு ரூ.12 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் துணை சபாநாயகர் பாலன், வழக்கறிஞர் சசிபாலன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

