/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : பிப் 10, 2024 06:20 AM

புதுச்சேரி : கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஷூரிட்டி இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில், பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
நிறுவன மனிதவள துறை மேலாளர் சக்திவேல், முருகப்பாண்டி ஆகியோர் அந்நிறுவனத்தின் பணி சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றி எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து குழு கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், எம்.ஐ.டி., பொறியியல் கல்லுாரியில் பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை துறை நடப்பு கல்வி ஆண்டு மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 50 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.