தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரும்பார்த்தபுரம் வாய்க்காலில் குவிந்த பிளாஸ்டிக் குப்பை: மழைநீர் வடிவதற்கு சிக்கல்

அரும்பார்த்தபுரம் வாய்க்காலில் குவிந்த பிளாஸ்டிக் குப்பை: மழைநீர் வடிவதற்கு சிக்கல்

அரும்பார்த்தபுரம் வாய்க்காலில் குவிந்த பிளாஸ்டிக் குப்பை: மழைநீர் வடிவதற்கு சிக்கல்


UPDATED : நவ 29, 2026 08:00 PM

ADDED : நவ 29, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 08:00 PM ADDED : நவ 29, 2026 08:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் பைபாசையொட்டி, செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் பல கிலோ மீட்டர் துாரத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதால், மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரும்பார்த்தபுரம் நகரப் பகுதியின் கழிவுநீரை உழந்தை ஏரிக்குக் கொண்டு செல்வதில் இந்த வாய்க்கால் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஒரு காலத்தில் இப்பகுதி விவசாயத்திற்கான பிரதான பாசன வாய்க்காலாக விளங்கியது.

தற்போது மழைக்காலங்களில் வெள்ள வடிகாலாகவும், மற்ற நேரங்களில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலாகவும் மாறியுள்ளது.

இந்த வாய்க்கால் முழுதும் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் நீரோட்டம் தடைபட்டு, மழைக்காலங்களில் வெள்ள நீர் வடிவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, மழைநீர் தடையின்றி வடிந்து செல்ல ஏதுவாக, பொதுப்பணித் துறையின் நீர்ப்பாசனப் பிரிவு அதிகாரிகள் இந்த வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us