UPDATED : நவ 29, 2026 06:12 PM
ADDED : நவ 29, 2026 06:12 PM

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் டி.ஒய்.சி.எல்., அமைப்பு இணைந்து நடத்திய பெண்கள் வழிநடத்தும் பெண்கள் என்ற தலைப்பில் மாணவிகளுக்கான இரண்டு நாள் தற்காப்பு பயிற்சிப் பட்டறை நடந்தது.
இந்த பயிற்சிப் பட்டறையை கல்லுாரி முதல்வர் கதிர்வேல் தலைமையேற்று தொடங்கி வைத்து பேசினார். டி.ஒய்.சி.எல்., உறுப்பினர் யுவயாழினி, பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி, என்கனா டி.சி.ஒய்.எல்., ஒருங்கிணைப்பாளர் பூரணி, மனநல ஆலோசகர் வனிதா, இளைஞர் துாதுவர் மதினா பீ ஆகியோர் கலந்து கொண்டு மகளிருக்கான தலைமைத்துவம், வாழ்க்கை உத்திகள், பாதுகாப்பு அதிகாரமளித்தல், நம்பிக்கையான பெண்கள், பிரகாசமான எதிர்காலம், வலிமைஜயான, பாதுகாப்பான சமூகம் ஆகிய தலைப்புகளில் மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செந்தமிழ் ராஜா மற்றும் உதயகீதா ஆகியோர் செய்திருந்தனர்.
