UPDATED : நவ 18, 2026 06:00 PM
ADDED : நவ 18, 2026 06:00 PM
திருபுவனை: விழுப்புரம் மாவட்டம், கெங்கராம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 43; மதகடிப்பட்டு – மடுகரை சாலையில் உள்ள ஜி.ஆர்.பி., காம்ப்ளக்சில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் யோகேஷ், 17; மதகடிப்பட்டு பள்ளிநேலியனுார் சாலையில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 17ம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.
அன்று மாலை 4:45 மணிக்கு பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஞானாம்பிகை மாணவர் யோகேஷின் தாய் அஜந்தாவிற்கு போன் செய்து உங்கள் மகன் லோகேஷ் பள்ளியில் டெஸ்ட் எழுதும்போது பக்கத்தில் உள்ள மாணவரை பார்த்து எழுதியதால் ஒரு வாரத்திற்கு அவரை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக தெரிவித்து, மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்புவதாக கூறியுள்ளார்.
ஆனால் மாலை 6:00 மணி ஆகியும் மகன் வீட்டுக்கு வரவில்லை. அதனால் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்த போது, யோகேஷ் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவரது தந்தை காளிதாஸ் புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து, யோகேைஷ தேடி வருகின்றனர்.
