UPDATED : நவ 06, 2026 07:15 PM
ADDED : நவ 05, 2026 07:25 PM
புதுச்சேரி: புதுச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த தகராறில் இறந்த நபர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த சில மாதங்களாக 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் விற்று மது குடித்து வந்தார்.
திருநெல்வேளியை சேர்ந்த முருகன்,35; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் முருகனிடம் அந்த நபர் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.
இதில் தகராறு ஏற்பட்டு முருகன் அவரை கீழே தள்ளியுள்ளார். படு காயம் அடைந்த நபரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி இறந்தார். இதையடுத்து ஏற்கனவே வழக்கை விசாரித்து வந்த உருளையன்பேட்டை போலீசார், இதை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
