/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் மது குடித்த 14 பேர் மீது போலீசார் வழக்கு
/
பொது இடத்தில் மது குடித்த 14 பேர் மீது போலீசார் வழக்கு
பொது இடத்தில் மது குடித்த 14 பேர் மீது போலீசார் வழக்கு
பொது இடத்தில் மது குடித்த 14 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஜன 19, 2026 05:02 AM
பாகூர் ஜன. 19-: பாகூரில் பொது இடத்தில் மது குடித்த 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் நேற்று இரவு பாகூர், சோரியாங்குப்பம் பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, புறவழிச்சாலை பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாககுடிமகன்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.இதனை கண்ட டி.ஐ.ஜி., பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், பாகூர் பகுதியில் பொது இடங்களில் மது அருந்திய 10 பேர் மீதும், கிருமாம்பாக்கம் பகுதிகளில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.