ADDED : ஜன 14, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.
புதுச்சேரிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து படையெடுத்துள்ளார். மேலும், பொங்கலையொட்டி பொதுமக்கள் அதிகளவில் கடைகளுக்கு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் பெண்களை கிண்டல் செய்தல், போக்குவரத்து நெரிசல், ரவுடிகள் மாமூல் கேட்பதை தடுத்தல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடந்தது.
முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் துவங்கி, உப்பளம், நுாறு அடி சாலை வழியாக மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

