sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாக்கு மூட்டையில் உடல் கிடந்த வழக்கு வெளி மாவட்டங்களில் போலீஸ் விசாரணை

/

சாக்கு மூட்டையில் உடல் கிடந்த வழக்கு வெளி மாவட்டங்களில் போலீஸ் விசாரணை

சாக்கு மூட்டையில் உடல் கிடந்த வழக்கு வெளி மாவட்டங்களில் போலீஸ் விசாரணை

சாக்கு மூட்டையில் உடல் கிடந்த வழக்கு வெளி மாவட்டங்களில் போலீஸ் விசாரணை


ADDED : நவ 25, 2024 06:10 AM

Google News

ADDED : நவ 25, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் :

போலீசாருக்கு சவால்

கடந்த 12ம் தேதி அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் பெண் ஒருவரின் சடலம் சாக்கு மூட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்றும், கொலை செய்த நபரே வாக்குமூலம் அளித்த சற்று நேரத்தில், கல் குவாரியில் இருந்து அந்த பெண்ணின் சடலத்தை வானுார் போலீசார், புதுச்சேரி போலீசாருடன் ஒருங்கிணைந்து கல்குவாரியில் இருந்து கண்டெடுத்தனர்.
ஆனால், நேற்று முன்தினம் கல்குவாரியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடலில், தலை, கை, கால்கள் இல்லாததால், கொலையானவர் மற்றும் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.



வானுார் அருகே தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு, வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வெளி மாவட்டத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் தலை, கை, கால்கள் இன்றி சாக்கு பையில் கட்டப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. மார்பில் கஸ்துாரி என பச்சை குத்தப்பட்டிருந்தது.

வானுார் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட நபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார், உடல் கைப்பற்றப்பட்ட பகுதியை ஒட்டி இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உடல் கைப்பற்றப்பட்ட பகுதியில் பதிவான மொபைல் டவர் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

மற்றொரு குவாரியில் ஆய்வு


நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து வந்த மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு கல் குவாரியில் சென்று மோப்பம் பிடித்து நின்றது.

இதனால் அந்த குவாரியில் தலை, கை, கால்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த குவாரியில், ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வெளி மாவட்டத்தில் விசாரணை


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் யாரும் காணாமல் போனதாக சமீபத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது உறுதியானது.

இதன் காரணமாக தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் காணாமல் போன நபர்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக டி.எஸ்.பி., தெரிவித்தார்.

அடையாளம் காண காவல்துறை அறிவிப்பு


இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகம்: 04146- 222172. வானூர் காவல் நிலையம்: 94981 -00528, இன்ஸ்பெக்டர் : 80563 78855, சப் இன்ஸ்பெக்டர்: 99404 98445.

போலீசாருக்கு சவால்

கடந்த 12ம் தேதி அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் பெண் ஒருவரின் சடலம் சாக்கு மூட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்றும், கொலை செய்த நபரே வாக்குமூலம் அளித்த சற்று நேரத்தில், கல் குவாரியில் இருந்து அந்த பெண்ணின் சடலத்தை வானுார் போலீசார், புதுச்சேரி போலீசாருடன் ஒருங்கிணைந்து கல்குவாரியில் இருந்து கண்டெடுத்தனர். ஆனால், நேற்று முன்தினம் கல்குவாரியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடலில், தலை, கை, கால்கள் இல்லாததால், கொலையானவர் மற்றும் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.








      Dinamalar
      Follow us