/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி டாக்டர் உட்பட 2 பேருக்கு போலீஸ் வலை
/
மாஜி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி டாக்டர் உட்பட 2 பேருக்கு போலீஸ் வலை
மாஜி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி டாக்டர் உட்பட 2 பேருக்கு போலீஸ் வலை
மாஜி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி டாக்டர் உட்பட 2 பேருக்கு போலீஸ் வலை
ADDED : செப் 05, 2025 02:47 AM
புதுச்சேரி:புதுச்சேரியில், ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் இடத்தை விற்பதாக கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த டாக்டர் மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, எழில் நகரை சேர்ந்தவர் ராஜகோபால், 63; ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர், தனக்கு பழக்கமான ரெயின்போ நகர், முதல் குறுக்குத் தெருவை சேர்ந்த டாக்டர் திருவிக்ரம் மனைவி கல்பனா என்பவர் பெயரில் அரியாங்குப்பம், மணவெளியில் உள்ள 2,480 சதுரடி இடத்தை வாங்குவதற்கு, கடந்த 2021ம் ஆண்டு பிப்., மாதம் ரூ. 48 லட்சம் பேசி ஒப்பந்தம் போட்டுள்ளார்.
அதன்படி, அட்வான்ஸ் தொகையாக, ரூ. 25 லட்சத்தை திருவிக்ரம் மற்றும் அவரது மனைவி கல்பனாவிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் தெரிவித்தபடி, அந்த இடத்தை பத்திரப் பதிவு செய்து தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே, அந்த இடத்திற்கான பத்திரத்தை ராஜகோபால் ஆய்வு செய்தபோது, அது வேறு ஒருவர் பெயரில்இருந்துள்ளது. இதுகுறித்து திருவிக்ரமிடம் கேட்டபோது, கூடுதல் விலைக்கு அந்த இடத்தை விற்பனை செய்து விட்டதாகவும், தங்களுடைய அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவரையில் திருவிக்ரம், அவரது மனைவி கல்பனா ஆகிய இருவரும் அட்வான்ஸ் தொகையாக பெற்ற ரூ. 25 லட்சத்தை, ராஜகோபாலிடம் திரும்பகொடுக்கவில்லை.
இதுகுறித்து ராஜகோபால் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் டாக்டர் திருவிக்ரம், அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.