/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெபாசிட் தொகை ரூ.67.50 லட்சம் மோசடி மகன் உட்பட 3 பேருக்கு போலீஸ் வலை
/
டெபாசிட் தொகை ரூ.67.50 லட்சம் மோசடி மகன் உட்பட 3 பேருக்கு போலீஸ் வலை
டெபாசிட் தொகை ரூ.67.50 லட்சம் மோசடி மகன் உட்பட 3 பேருக்கு போலீஸ் வலை
டெபாசிட் தொகை ரூ.67.50 லட்சம் மோசடி மகன் உட்பட 3 பேருக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 06, 2025 08:39 AM
காரைக்கால் : டெபாசிட் பணம் ரூ.67.50 லட்சம் மோசடி தொடர்பாக மகன், மருமகள் மற்றும் வங்கி மேலாளர் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால், கோட்டுச்சேரி பூக்காரத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ். இவருக்கு சுசிலாதேவி, சுசிலா என்ற இரு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் , இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோவிந்தராஜ், காரைக்காலில் உள்ள தனியார் வங்கியில் ரூ.67.50 லட்சம் டெபாசிட் செய்திருந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு இறந்து விட்டார்.
கோவிந்தராஜ் வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகையை அவரது வாரிசான சுசிலாதேவி பெற வங்கிக் சென்றபோது, வாரிசு சான்று வாங்கி வருமாறு வங்கி மேலாளர் கூறினார்.
இந்நிலையில், இரண்டாவது மனைவியின் மகனான வெற்றிவேல், வங்கியில் இருந்த டெபாசிட் தொகையை பெற்றது தெரிய வந்தது. இதுகுறித்து சுசிலாதேவி வங்கிக்கு சென்று கேட்டபோது, மேலாளர் அந்தோணி ரூபன், வாரிசு சான்று கொடுத்து, அனைவரும் கையெழுத்திட்டு பணத்தை வாங்கி சென்றுவிட்டு, மீண்டும் வந்து பணம் கேட்கிறீர்களா எனக் கேட்டு, போலீசில் புகார் செய்து விடுவதாக மிரட்டினார்.
விசாரித்ததில், வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி சங்கரி (எ) சாரதாம்பாள் இருவரும் வங்கி மேலாளருடன் கூட்டு சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்து போலியாக கையெழுத்து வாங்கி டெபாசிட் பணத்தை எடுத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சுசிலாதேவி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சுசிலாதேவி புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்க காரைக்கால் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், வெற்றிவேல், சங்கரி (எ) சாரதாம்பாள், வங்கி மேலாளர் அந்தோணி ரூபன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் காரைக்கால் இன்ஸ்பெக்டர் புருேஷாத்தமன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.