ADDED : அக் 22, 2026 06:08 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டி இறந்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி லபோர்த்தோ தெருவை சேர்ந்தவர் மேரி, 93; இவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். வீட்டில் இருந்த இவருக்கு நேற்று முன்தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவரின் உதவியாளர் மூலம் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து, இறந்தவரின் உதவியாளரான ஆண்ட்ரூஸ் கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
