/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் வழியே மது கடத்தலை தடுக்க படகுகளில் போலீசார் சோதனை
/
கடல் வழியே மது கடத்தலை தடுக்க படகுகளில் போலீசார் சோதனை
கடல் வழியே மது கடத்தலை தடுக்க படகுகளில் போலீசார் சோதனை
கடல் வழியே மது கடத்தலை தடுக்க படகுகளில் போலீசார் சோதனை
ADDED : மார் 20, 2024 02:10 AM

புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் பண பட்டுவாடா, மதுபானம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்காக கலால் துறை மற்றும் போலீசார் இணைந்து பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர். கடல் வழியாக ஏதேனும் கடத்தப்படுகிறதா என்பதை அறிய கடலோர போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மீன்பிடி விசைப்படகுகளில், கடலோர காவல் பிரிவு போலீசார் மதுபானம், பரிசு பொருட்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர். புஸ்சி வீதியில் ஓதியஞ்சாலை போலீசார் நேற்று காலை 11:00 மணிக்கு திடீரென வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதுபோல் எல்லை பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளிலும்,கலால் துறை மற்றும் போலீசார் இணைந்து வாகனங்களை ஆய்வு செய்தனர்.