/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு விற்பனையில் மோசடி போலீசார் வழக்கு பதிவு
/
வீடு விற்பனையில் மோசடி போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஜன 01, 2025 05:17 AM
புதுச்சேரி : வீடு விற்பனையில் மோசடி நடந்ததாக, தனியார் பள்ளி ஆசிரியை புகார் அளித்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யா, 42. தனியார் பள்ளி ஆசிரியை. இவரது கணவர் கோபிநாதன். ரயில்வே ஊழியர். லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் சத்யா புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
நானும் எனது கணவரும் சொந்தமாக வீடு வாங்க விரும்பினோம். கடந்த 2023,ம் ஆண்டில், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ராம்குமாரின் வீட்டை ரூ.97 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விலை பேசி, கிரைய உடன்படிக்கை செய்தேன்.
உடன்படிக்கையில் குறிப்பிட்ட பணத்தை விட கூடுதலாக, ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அவருக்கு பணம் கொடுத்தேன். அந்த கூடுதல் பணத்தை சொத்து விற்று தருவதாக சொன்னார். அதன் பிறகு வீடு எனது பெயரில் கிரையம் செய்யப்பட்டது.
அந்த வீட்டை ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், வேறு சிலருக்கு போக்கியம் விட்டு என்னை ஏமாற்றி, மோசடி செய்துள்ளனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

